கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்த யூனுஸ் கான்!

Thursday, November 3rd, 2016

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சரித்திரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான யூனுஸ்கான் அதிகமான தடவை டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் 4வது  வீரர் என்ற ஓர் அரிய சாதனை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் யூனுஸ் கான் இந்த சாதனையை படைத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிஸ் கெயிலை பின்தள்ளியுள்ளார்.

சர்வதேச ஆட்டங்களில் குறைந்தது 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்தவர்களில் அதிகமான பூச்சியத்துடன் ( டக் அவுட் ) ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் இப்போது யூனுஸ் கான், கெயிலை பின்தள்ளியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 வது போட்டியில் 2 ம் இன்னிங்ஸில் பூச்சியத்துடன் ஆட்டமிழந்த நிலையில்தான் யூனுஸ் கான் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார்.

இந்தப் பட்டியலில் சனத் ஜயசூரிய 53 தடவைகளுடன் முதலிடத்திலும், மஹேல ஜெயவர்தன 47 தடவைகளுடன் 2 ம் இடத்திலும், ஷஹிட் அப்ரிடி 44 தடவைகளுடன் 3 ம் இடத்திலும் காணப்படும் அதேவேளை யூனுஸ் கான் 41 வது தடவையாக பூச்சியத்துடன் ஆட்டமிழந்து இந்தப் பட்டியலில் 4 ம் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடதக்கது.

25col4385

Related posts: