கிண்ணத்தைத் தனதாக்கியது நெல்லியடி மத்திய கல்லூரி!

வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான கபடியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து முல்லைத்தீவு பாலிநகர் வித்தியாலய அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நெல்லியடி மத்திய கல்லூரி அணி 39:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது. மூன்றாமிடத்தை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி பெற்றது. சிறந்த கபடி வீரராக நெல்லியடி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த அன்ரன் ஜெனாட் அஜித் தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
டோனி சிறந்த வீரர் கிடையாது -சவுரவ் கங்குலி !
ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு தகுதி!
ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!
|
|