கழகம் மாறமாட்டார் பார்சிலோனா வீரர் சுவாரஸ் !

Saturday, November 5th, 2016

பிரபலமான பார்சிலோனா கழகத்தின் முன்கள வீரரான சுவாரஸ் ,பார்சிலோனா கழகத்திலிருந்து இன்னுமொரு கழகத்திற்கு மாறுவதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனா கழகத்தின் பணிப்பாளர் ஜோசப் பார்டெமோ இதனைத் தெரிவித்துள்ளார். 2014 ம் ஆண்டு லிவர்பூல் கழகத்தின் முன்கள வீரரான சுவாரஸ் , பார்சிலோனா கழகத்துக்கு மாற்றலானார் .அதன்பின்னர் நட்ச்சத்திர வீரர்களான நெய்மார், மெஸ்ஸி ஆகியோருடன் இணைந்து பார்சிலோனா கழகத்தின் வெற்றிகள் பலவற்றுக்கு சுவாரஸ் முக்கிய பங்களிப்பைக் கொடுத்துவந்தார்.

இந்த நிலையில் சுவாரஸ், பார்சிலோனா கழகத்திலிருந்து மான்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கு மாறவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்தக் கருத்தையே பார்சிலோனா கழகத்தின் பணிப்பாளர் ஜோசப் பார்டெமோ மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

colreceived_10210914828576263145054443_4976633_04112016_aff_cmy

Related posts: