களமிறங்கினார் ஜூனியர் மெஸ்ஸி..!
Tuesday, November 1st, 2016
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் மகன் தியாகோ மெஸ்ஸி தனது முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது.
நான்கு வயதான தியாகோ மெஸ்ஸி எதிர்காலத்தில் தந்தையை போலவே மிக சிறந்த ஆட்டக்காரராக திகழ்வார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலைியல், பார்சிலோனா கிளப்பின் இளைஞர் அகாடமியான La Masiaயாவில் தனது முதல் பயிற்சி வகுப்பில் களமிறங்கியுள்ளார் தியாகோ மெஸ்ஸி.
பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் பார்சிலோனாவின் ஜெர்சி அணிந்து தியாகோ மெஸ்ஸி மைதானத்தில் பயிற்சி பெறுகிறார். இதை பார்த்த பலர் தியாகோ எதிர்காலத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு கடும் சவாலாக திகழ்வார் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts:
கால் இறுதிக்கு 10 முறை தகுதிக்கு பெற்ற முதல் வீரர் ஜோகோவிச் !
நியூசிலாந்து தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர்!
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் உள்வாங்கப்படும் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!
|
|
|


