கட்டாயமாக்கப்பட்டது Stop Clock விதி – சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு!

Saturday, March 16th, 2024

Stop Clock விதியை கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும்.

இரண்டு முறை எச்சரித்த பிறகும் தொடர்ந்தால் ஒவ்வொரு கால தாமதத்துக்கும் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: