கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி!  

Friday, January 13th, 2017

அவுஸ்திரேலியாவில் உள்ளூர் டி 20 போட்டியான Big Bash லீக் தொடரில் கடைசி ஓவரில் பிராட்டின் அதிரடி ஆட்டத்தால் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

குறித்த தொடரின் 24 வது ஆட்டத்தில் Melbourne Renegades மற்றும் Hobart Hurricanes அணிகள் மோதின. இதில் Melbourne Renegades முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களான ஹாரிஸ் மற்றும் பின்ச் அதிரடி ஆட்டத்தை காட்ட அணியின் ஓட்டங்கள் மளமளவென எகிறியது.

ஹாரிஸ் 25 ஓட்டங்களும், பின்ச் 63 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கூப்பர் 24 பந்தில் 53 ஓட்டங்கள் குவித்து வானவேடிக்கை நிகழ்த்தினார்.

இதனால் Melbourne Renegades அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் குவித்தது. இமாலய இலக்கை விரட்டுவதற்கு Hobart Hurricanes சார்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய சார்ட் 18 ஓட்டங்களிலும், பெய்ன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய மெக்டெர்மோட் 52 பந்தில் 114 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 114 ஓட்டங்களில் இவர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பெய்லி 59 ஓட்டங்கள் குவிக்க ஆட்டத்தில் அனல் பறந்தது.

இதனால் Hobart Hurricanes அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. Melbourne Renegades அணி சார்பில் கடைசி ஓவரை இலங்கை அணியைச் சேர்ந்த திசரா பெரரா வீசினார். இதில் முதல் பந்தில் 1 ஓட்டமும், அடுத்த பந்தில் ஒரு ஓட்டமும் எடுத்து இரண்டாவது ஓட்டத்திற்கு முயற்சி செய்த போது பாய்ஸ் ரன் அவுட் ஆக Hobart Hurricanes அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் ஆட்டம் Melbourne Renegades அணி பக்கம் திரும்பியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அடுத்து வந்த இங்கிலாந்து வீரர் பிராட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாச Hobart Hurricanes அணி அபார வெற்றி பெற்றது. இதனால் அந்தணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் 223 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

இப்போட்டியில் கடைசி ஓவரில் யாரும் எதிர்பாரத வகையில் பிராட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து வெற்றி பெற்றதால், Hobart Hurricanes அணி வீரர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர்.மேலும் கடைசி ஓவரில் திசாரா பெரரா 16 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து Melbourne Renegades அணிக்கு வில்லனாக மாறினார். இப்போட்டியில் ஆட்ட நாயகனாக சதம் அடித்து Hobart Hurricanes அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட மெக்டெர்மோட் தெரிவு செய்யப்பட்டார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: