ஓய்வை அறிவித்த அஜந்த மென்டிஸ் ..!
Thursday, August 29th, 2019
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த அஜந்த மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
காலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நீண்டகாலமாக விலகியிருந்தார். இராணுவ விளையாட்டுக் கழகத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு பிரவேதித்த மென்டிஸ், முரளிதரனின் திறமைக்கு மத்தியிலும் தனது தனித்தன்மையை சர்வதேச அரங்கில் வெளிக்காட்டியிருந்தார்.
19 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள மென்டிஸ் 70 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 87 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 152 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுவரையில், 39 சர்வதேச டி20 போட்டிகளில் பங்குபற்றியுள்ள மென்டிஸ், 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹரூபிற்கு பதவி!
உலகின் கவனத்தை திருப்பிய இலங்கை அணி!
இலங்கை கிரிக்கெற் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு அர்ஜுனவிடம் அமைச்சர் நாமல் கோரிக்கை!
|
|
|


