ஓய்வை அறிவித்தார் இம்ரான் தாஹிர்!
Tuesday, March 5th, 2019
ஒருநாள் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர்(39), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள எதிர்வரும் 2019ஆம் உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஒருநாள் சர்வதேச போட்டிகள் 95 இல் விளையாடி 156 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
2020 இல் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் விளையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமெரிக்காவில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்!
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் - கல்வி அமைச்சர் !
இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் !
|
|
|


