ஓய்வு பெற்ற பிராவோ!
Friday, October 26th, 2018
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 2968 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 112 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதோடு 199 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள பிராவோவின் சிறந்த பந்துவீச்சு 43 ஓட்டங்களை விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியது ஆகும்.
பிராவோ மொத்தமாக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 113 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 86 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவரின் சிறந்த பந்துவீச்சு 55 ஓட்டங்களை விட்டு கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியது ஆகும். 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 1142 ஓட்டங்களை மொத்தம் எடுத்துள்ளார்.
அவரின் அதிகபட்ச ஓட்டம் 66 ஆகும். டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 28 ஓட்டங்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது பிராவோவின் சிறந்த பந்துவீச்சாகும்.
Related posts:
|
|
|


