ஐ.பி.எல். போட்டிக்கு நிகராக வருகிறது மகளீர் IPL.!
Tuesday, February 27th, 2018
ஐ.பி.எல் போட்டிகளுக்கு சமாந்தரமாக மகளீர் இருபதுக்கு 20 கண்காட்சி கிரிக்கட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கட் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நிறுவாக குழுவின் தலைவர் வினோத் ராய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரத்தியேகமாக மகளீர் 20க்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கான முன்னோட்டமாக இந்த கண்காட்சி போட்டிகள் அமையவுள்ளன.
இதற்கு ஏற்ற சூழ்நிலை அமையும் பட்சத்தில் இவ்வாறான அதிக கண்காட்சி மகளீர் கிரிக்கட் போட்டிகளை இந்த ஆண்டு நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஐ.பி.எல் போட்டிகளில் மகளீர் கிரிக்கட் வீராங்கனைகள் விளையாட தகுதியானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
விராட் கோலி முதலிடத்தில் !
மத்யூஸ் குறித்து முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் 10 வருடங்களுக்கான இலங்கை அணி தயார் - நல்லையா தேவராஜன்!
|
|
|


