ஐபிஎல் தொடர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்களால் அணி வெற்றி!
Wednesday, March 27th, 2024
2024 ஐபிஎல் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்களால் அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிவம் துபே 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் சாய் சுதர்ஷன் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொண்ட இரு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


