ஐசிசி உலகக் கோப்பை 2023 – வெளியான புதிய அட்டவணை!
Friday, July 7th, 2023
தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதிமுதல் நடைபெறவுள்ளது.
பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்தது.
இதனால் ஐசிசி அண்மையில் வெளியிட்ட அட்டவணையில் எட்டு அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் முடிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மன்னிப்பு கோரிய ப்ரீத்தி ஜிந்தா!
உலகக் கிண்ண கிரிக்கெற்: தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு - ஐ.சி.சி.!
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி அணிகள் தெரிவு – நாட்டை வந்தடைந்தது இலங்கை அணி!
|
|
|


