ஏனைய ஆட்டங்களுக்கு சம்பளம் தேவையில்லை – கம்பீர் !

Sunday, April 29th, 2018

தொடர் தோல்விகளின் எதிரொலியாக டெல்லி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய கம்பீர், ஏனைய ஆட்டங்களுக்குத் தான் ஊதியம் வாங்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். இதன்படி கம்பீர் பெறமறுக்கும் சம்பளம் இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபா.

கொல்கத்தா அணியுடன் ஏற்பட்ட மனக் கசப்புக்களை அடுத்து அந்த அணியில் இருந்து விலகினார் கம்பீர். இந்த வருடம் அவர் டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அத்துடன் அணித்தலைவர் பொறுப்பும் கம்பீருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் கம்பீரின் தலைமையில் ஆறு ஆட்டங்களில் விளையாடிய டெல்லி ஓர் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்தது. இதையடுத்து அணித் தலைமைப் பொறுப்பில் இருந்து கம்பீர் விலகினார். பதில் தலைவராக ஸ்ரேயாஸ் பெயரிடப்பட்டார். இந்த நிலையில் தனது தலைமையில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பொறுப்பேற்று ஏனைய ஆட்டங்களுக்கு ஊதியம் பெறப்போவதில்லை என்று அறிவித்தார் கம்பீர்.

Related posts: