எனக்கு தலைவலியாக இருந்தவர் இவர்தான் – உண்மையை சொல்கிறார் சனத் ஜெயசூரியா!

Sunday, December 4th, 2016

இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே தான் தனக்கு மிகவும் தலைவலியாக விளங்கியதாக இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தெரிவுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா ‘A Tall Order’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், என்னை பொறுத்தவரை அனில் கும்ப்ளே அச்சுறுத்தல் பவுலராக விளங்கினார். பல விதங்களில் பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார். நன்றாக திட்டமிட்டு பந்துவீசும் அவர் சிறப்பான துடுப்பாட்ட வீரர்களுக்கு கூட தலைவலியாக இருப்பார்.

அதேபோல் ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தல் வீரராக விளங்கினர்.

துடுப்பாட்ட வீரர்களை பொறுத்தவரை சந்தேகமே இல்லை சச்சின் தான். பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் வீரர் என்றால் அவர் தான். நெருக்கடியான சூழ்நிலையில் கூட அவர் சிறப்பாக செயல்படுவார்.

ஐபிஎல் தொடரில் இவர்களுடன் நான் மும்பை அணியில் விளையாடி இருக்கிறேன். இவர்கள் மூன்று பேரும் எனக்கு நெருக்கமானவர்கள். மேலும், வசீகரமான வீரர் என்றால் யுவராஜ் சிங்கை கூறலாம். மற்றொருவர் ஷேவாக், மிகவும் மோசமானவர். எதிரணிக்கு எளிதில் அழிவை தேடித் தரக் கூடிய ஆபத்தான வீரர் என்று கூறியுள்ளார்.

jeyasuriya_01

Related posts: