எதிர்பார்த்த வீரர்கள் கிடைத்துள்ளனர் – T – 20 உலக கிண்ணம் குறித்து இலங்கையின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024

தான் எதிர்பார்த்த அணி வீரர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அதன்படி எமது பந்து வீச்சாளர்கள் சிலர், ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக்கொண்டு அனுபவங்களை பெற்றுக்கொண்டே உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு வருகைத் தருகின்றார்கள்.

அதேபோன்று எமது துடுப்பாட்ட வீரர்களும் கடந்த காலங்களில் சிறந்த முறையில் பிரகாசித்துள்ளனர். அதேபோன்று, நான் கோரியிருந்த அணி வீரர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். தலைவர் என்ற விதத்தில் பாரிய நம்பிக்கையுடன் நான் பயணிக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: