உஸ்பெக்கிஸ்தான் ஜனாதிபதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

உஸ்பெக்கிஸ்தானின் ஜனாதிபதி இஸ்லம் கரிமொவ், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் கடந்த சனிக்கிழமை (27) பாதிக்கப்பட்டதாகவும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், உறுதியான நிலையில் இருப்பதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், அவரது எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புக்களை மேற்கொள்ள முடியாது என தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், அவரது மகள் லோலா கரிமோவா-திலயேவா, திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளதோடு, தனது தந்தைக்கு, பிரார்த்தனைகள் மூலம் ஆரவளிக்கும் ஒவ்வொருவருக்கும் தான் நன்றியுடையவளாய் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தகர்ந்ததுடன் உஸ்பெக்கிஸ்தான் சுதந்திரம் பெற்றிருந்தது. அன்று முதல், 25 வருடங்களாக, 78 வயதான கரிமொவ்வே ஆட்சி செய்து வருகின்றார். இந்நிலையில், அவருக்கு உறுதியான எதிரணி இல்லாத நிலையில், கரிமொவ்வின் குடும்பம் மற்றும் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய நெருங்கிய வட்டத்துக்குள் ஒருவரே அடுத்து பதவிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
Related posts:
|
|