உலக சம்பியன்கள் என்பதை நிரூபித்த ஜேர்மனி!

Tuesday, July 4th, 2017

ரஸ்யாவில் இடம்பெற்ற 8 அணிகள் பங்கேற்ற கூட்டுறவு கிண்ண கால்பந்து தொடரின் பரபரப்பான இறுதி போட்டியில் சிலி அணியை வீழ்த்தி ஜேர்மனி வெற்றிபெற்றுள்ளது.

தொடரின் லீக் போட்டிகள் முடிவில் போர்த்துக்கல், சிலி, மெக்சிகோ, ஜெர்மனி அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன.முதல் அரையிறுதிப் போட்டியில் சிலி போர்த்துக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் சிலி அணி கோல்காப்பாளரும் அணித்தலைவருமான கிளாடியோ பிராவோவின் திறமையால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சிலி முன்னேறியது.

மற்றைய அரை இறுதி போட்டியில் உலக சாம்பியன்களான ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகள் போட்டியிட்ட நிலையில் 4-1 எனும் அடிப்படையில் வெற்றிபெற்ற ஜேர்மனி இறுதி போட்டியை எட்டியது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பரபரப்பான இறுதி போட்டியில் உலக சம்பியன்களான ஜேர்மனி மற்றும் சிலி அணிகள் பலப்பரீடசை நிகழ்த்தின. இரு அணி வீரர்களும் மூர்க்கத்தனமாக முட்டிமோதினாலும் இறுதியில் தாங்கள் உலக சாம்பியன்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் 1-0 என்று ஜேர்மனி வெற்றி பெற்றது.

கோல்காம்பத்தை நோக்கி சிலி அணி வீரர்கள் 20 தடவைகளும், ஜேர்மனி அணியினர் 9 தடவைகளும் பந்தை செலுத்தினாலும் ஒரேயொரு கோல் மட்டுமே போட்டியில் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.தங்கப்பந்து(Golden Ball) விருது ஜெர்மனி வீரர் ஜூலியன் ட்ரக்ஸ்லருக்கும் , தங்க பாதணி (Golden Boot) விருது ஜெர்மனியின் டிமோ வெர்னருக்கும் , தங்க கையுறை (Golden Glove) விருது சிலி அணியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோவுக்கும் கிடைத்தது.

Related posts: