உலக கிண்ண கபடி நேற்று இந்தியாவில் ஆரம்பம்!

12 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா மோதுகின்றன.
உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 22-ம் திகதி வரை இந்தப் போட்டி அங்குள்ள டிரான்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
உலக கோப்பை கபடி போட்டியில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சம்பியன் இந்தியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்கொரியா, ஆர்ஜன்டினா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், அமெரிக்கா, போலந்து, கென்யா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 19-ம் திகதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 21-ம் திகதி அரை இறுதி ஆட்டங்களும், 22-ம் திகதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.
Related posts:
|
|