உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம் – சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை!
Wednesday, November 16th, 2022
உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்போது யுக்ரைனில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) கோரியுள்ளது.
இந்தோனேஷியாவின் ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றும் நாடுகளின் தலைவர்களிடம் பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 20 முதல் டிசெம்பர் 18 ஆம் திகதி வரை கத்தாரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை ரஷ்யா நடத்தியதையும், 2030 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்துவதற்கு ஸ்பெய்ன், போர்த்துகலுடன் யுக்ரைனும் இணைந்து விண்ணப்பித்துள்ளதையும் அவர் இன்பன்டினோ சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களையடுத்து, ரஷ்யாவுக்கு பீபா தடை விதித்துள்ளது. இதேவேளை யுக்ரைனும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


