உலகின் கோப்பை கால்ப்பந்து விளையாட்டுத் திருவிழா ஆரம்பம்!

Thursday, May 17th, 2018

ஜூன் 14ஆம் திகதி தொடங்கும் உலகின் கோப்பை கால்ப்பந்து விளையாட்டு தொடரின் முதல் போட்டியில் பிரிவு ஏ- யில் இடம்பிடித்த ரஷியாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.

ரஷியாவின் 12 விளையாட்டு மைதானங்களில், ஜூலை 15-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018 ரஷியாவில் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. உலகிலேயே பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா கால்பந்து போட்டிகள் தான் அதிகளவில் பார்வையாளர்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் முதலிடத்தை பெறுகிறது. கடந்த 1930-இல் முதல் உலகக் கோப்பை

போட்டிகள் நடைபெற்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து போட்டிகளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பிஃபா நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் போட்டிகளை நடத்த விண்ணப்பித்தாலும், அங்குள்ள விளையாட்டு அரங்குகள், வீரர்களுக்கான வசதிகள், போக்குவரத்து, செலவிடும் திறன் போன்றவற்றை பிஃபா குழு நேரில் சென்று ஆய்வு செய்யும். ஷ

பின்னர் கூடும் அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வாக்களித்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வது வழக்கம். கடந்த 1930இல்

தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இடையில் உலகப் போர்களால் 1942, 1946ஆம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. இறுதியாக 2014-இல் பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

ஆண்டு வென்ற அணிகள் நடந்த நகரம் நாடுகள்

1930 உருகுவே, மாண்டிவிடோ உருகுவே

1934 இத்தாலி ரோம் இத்தாலி

1938 இத்தாலி பாரிஸ் பிரான்ஸ்

1942 உலகப்போர் 1

1946 உலகப் போர் 2

1950 உருகுவே ரியோ டி ஜெனிரோ பிரேசில்

1954 மேற்கு ஜெர்மனி பெர்ன் சுவிட்சர்லாந்து

1958 பிரேசில் சோல்னா ஸ்வீடன்

1962 பிரேசில் சாண்டியாகோ சிலி

1966 இங்கிலாந்து லண்டன் இங்கிலாந்து

1970 பிரேசில் மெக்ஸிகோ சிட்டி மெக்ஸிகோ

1974 மேற்கு ஜெர்மனி முனிக் ஜெர்மனி

1978 ஆர்ஜென்டீனா பியனோஸ் அயர்ஸ் ஆர்ஜென்டீனா

1982 இத்தாலி மாட்ரிட் ஸ்பெயின்

1986 ஆர்ஜென்டீனா மெக்ஸிகோ சிட்டி மெக்ஸிகோ

1990 மேற்கு ஜெர்மனி ரோம் இத்தாலி

1994 பிரேசில் பஸஸடனா அமெரிக்கா

1998 பிரான்ஸ் செயின்ட் டெனிஸ் பிரான்ஸ்

2002 பிரேசில் யோகாஹமா ஜப்பான்

2006 இத்தாலி பெர்லின் ஜெர்மனி

2010 ஸ்பெயின் ஜோகன்னஸ்பர்க் தென் ஆப்பிரிக்கா

2014 ஜெர்மனி ரியோடி ஜெனிரோ பிரேசில்

அதிக முறை பட்டம் வென்ற நாடுகள்

பிரேசில்-5, ஜெர்மனி, இத்தாலி-4, ஆர்ஜென்டீனா, உருகுவே-2, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் தலா 1 முறை.

32 நாடுகள் பங்கேற்பு

2018 பிஃபா உலகக் கோப்பை (2018 ) சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஓர் பன்னாட்டு கால்பந்தாட்ட போட்டியாகும். 21வது முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை ரஷியா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் முதலாவது கால்பந்து உலகக்கோப்பை இதுவாகும். இறுதிப் போட்டிகள் ஒரு போட்டி தவிர ஏனையவை ரஷியாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெறுகின்றன.

இறுதிச் சுற்றில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிப் போட்டிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டன. ரஷியா போட்டிகளை நடத்தும் நாடாக தகுதி பெற்றது.

32 அணிகளில், ஐஸ்லாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 அரங்குகளில் 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இறுதிப் போட்டி வரும் ஜூலை 15 இல் மாஸ்கோவின் லூசினிக்கி அரங்கில் நடைபெறும்.

இத்தாலியின் புதிய பயிற்சியாளர் மான்சினி

இத்தாலி கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராபர்டோ மான்சினி பொறுப்பேற்றார்.

கால்பந்து விளையாட்டில் மிகவும் முக்கியமான அணிகளில் ஒன்று இத்தாலி ஆகும். அந்த அணி 4 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. மேலும் ஜுவென்டஸ், ரோமா, ஏசி மிலன், உள்ளிட்ட புகழ் பெற்ற கால்பந்து கிளப் அணிகளும் இயங்கி வருகின்றன. அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் தகுதி பெற்ற இத்தாலி, நிகழாண்டு ரஷியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. இது இத்தாலி கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராபர்டோ மான்சினி புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இத்தாலி அணியின் செயல்திறனை மேம்படுத்தி, 6 மாதங்களுக்குள் மீண்டும் இழந்த இடத்தைப் பெறச் செய்யும் பொறுப்பு மான்சினியிடம் உள்ளது.

ஜெர்மனியின் பயிற்சியாளர் பணிக்காலம் நீட்டிப்பு: ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜோசெம் லியுவின் ஒப்பந்த பணிக்காலம் வரும் 2022-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் லியு பயிற்சியாளராக நீடித்து வருகிறார். மேலும் 2014-ஆம் ஆண்டு ஜெர்மனி உலகக் கோப்பை வெல்ல உதவினார்.

போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் விவரம் வருமாறு –

பிரிவு- ஏ ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா

பிரிவு-  பி போர்ச்சுகல், ஸ்பெயின், ஈரான், மொராக்கோ

பிரிவு-  சி பிரான்ஸ், பெரு, டென்மார்க், ஆஸ்திரேலியா

பிரிவு-  டி ஆர்ஜெண்டீனா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா

பிரிவு-  இ பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா

பிரிவு-  எப் ஜெர்மனி, மெக்ஸிகோ, ஸ்வீடன், தென் கொரியா

பிரிவு-  ஜி பெல்ஜியம், இங்கிலாந்து, துனிஷியா, பனாமா

பிரிவு-  ஹெச் போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான்

Related posts: