உலகக் கிண்ண கிரிக்கெட்: அவுஸ்திரேலியா வெற்றி!

Sunday, June 30th, 2019

உலகக் கிண்னம் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரில் 37-வது லீக் ஆட்டம் லார்ட்சில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணித் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தார்.

அவுஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், பின்ச்சும் களமிறங்கினர். 15 ஓட்டங்களை கடந்த போது அணித் தலைவர் பின்ச் 8 ஓட்டங்கலுடன் வெளியேறினார்.

அதன்பின்னர் வந்த வீரர்களை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.

92 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா தடுமாறியது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அலெக்ஸ் கேரி 71 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் 50 ஓவர் முடிவில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 243 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.அதில் ஹென்றி நிகோலஸ் 8(20), மார்டின் கப்தில் 20(43) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக அணித் தலைவர் கேன் வில்லியம்சன்னுடன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 40(51), அவரைத்தொடர்ந்து ராஸ் டெய்லர் 30(54), கிராண்ட் ஹோம் (0) என தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய டாம் லாதம் 14(28), ஜேம்ஸ் நீசம் 9(22), சோதி 5(4), சாண்ட்னர் 12(29) ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

முடிவில் நியூசிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அவுஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், ஜேசன் பெஹண்ட்ரோப் 2 விக்கெட்டுகளும், லயான், கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

Related posts: