உதயசூரியனின் கிண்ணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ்.வசம்!
Tuesday, May 8th, 2018
சுன்னாகம் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடத்திய மாபெரும் மென்பந்து சுற்றுத் தொடரினை கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஆணி கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் ஜி.பி.எஸ். ஆணியை எதிர்த்து சுழிபுரம் விக்டோறியா விளையாடியது. முதலில் துடுப்பெடுத்தாடிய விக்டோறிய அணி 6 ஓவர்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
59 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜி.பி.எஸ். ஆணியை சுரே~; தனது அதிரடி துடுப்பாட்டம் மூலம் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
அணித் தலைவர் கிருபாகரன் இறுதியில் தொடர்ந்து இரு சிக்ஸர்கள் விளாச அணி வெற்றியை தொடர்ந்தது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சுரே~; தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
முதல் இனிங்ஸில் இலங்கை அணி 494 ஓட்டங்கள் குவிப்பு...!
இரண்டாவது போட்டி இன்று : தொடரை வெல்லுமா இலங்கை!
ஆசிய கிண்ண வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர!
|
|
|


