உடற் தகுதியில் தேறிய சுரேஷ் ரெய்னா மீண்டும் தேசிய  அணியில் வாய்ப்புக்கிடைக்குமா?

Saturday, December 23rd, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான சுரேஷ் ரெய்னா ஒரு காலகட்டத்தில் மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக இவரின் பங்களிப்பு அளப்பரியது. பகுதி நேர பந்து வீச்சாளராக காணப்படும் இவர், சிறந்த அதிர துடுப்பாட்ட மற்றும் களத்தடுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பல வீரர்கள் இந்திய அணியில் உள்வாங்கப்பட்டும் பரீட்சிக்கப்பட்டும் வருவதால், இந்திய தேர்வாளர்களால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்படும் சந்தர்ப்பம் மிளிர்ந்துள்ளது. நீண்டகாலமாக இந்தியாவின் துடுப்பாட்ட வரிசையில் குறிப்பாக ஆட்டம் காணும் நிலை என்றால் மத்திய வரிசைதான் பல வீரர்களை குறிப்பாக கேதார் யாதவ்,தினேஷ் கார்த்திக்,மனிஷ் பாண்டே,லோகேஷ் ராகுல் என வீரர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கியும் சரியான ஒருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

குறிப்பாக ரெய்னாவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்திருந்த கேதார் யாதவ் உபாதையடைந்துள்ள காரணத்தால், மீளவும் தனது இடத்தை தக்க வைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. உடற்தகுதி சோதனையில் தகுதி பெற தவறியிருந்த ரெய்னா, இப்போது பெங்களூரில் இடம்பெற்ற உடற்தகுதி சோதனையில் (yo-yo test) தேறியுள்ளார்.இதன்காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள்மற்றும் T20 தொடருக்குரிய இந்திய அணியில் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

ஒவ்வொரு அணியிலும் முதுகெலும்பான மத்திய வரிசை டாப்பில் இருக்கும் இந்திய அணிக்கு தலைவலியாகவே இருந்து வருகின்றது. மீண்டும் பரீட்சிப்பா அல்லது ரெய்னாவுக்கு வாய்ப்பா? ஹோலியின் தலைமையின் கீழ் சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள் தேசிய அணியில் பெரிதாக உள் வாங்கப்படுவதில்லை என்கின்ற விமர்சனம் இருக்கின்றமை குறிப்பிட்ட வேண்டிய விடயமாகும்.

Related posts: