இலங்கை வீராங்கனை புதிய சாதனை!
Thursday, July 12th, 2018
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற குளியாப்பிட்டிய மத்திய வித்தியாலத்தை சேர்ந்த பாரமி வசந்தி தற்போது புதிய கனிஷ்ட இலங்கை மெய்வல்லுனர் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
பின்லாந்தில் நடைபெறும் 17ஆவது சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 3000 மீட்டர் மகளிருக்கான தடகள ஓட்டப்போட்டியில் இந்த சாதனையை இவர் நிலைநாட்டியுள்ளார்.
இந்த முதற்சுற்று போட்டியில் இவர் 5ஆவது இடத்திற்கு தெரிவானார். 10 நிமிடங்கள் 20.12 வினாடிகளில் இந்த தூரத்தை ஓடி முடித்தார்.
பின்லாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் 158 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 1500 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமான ரசிகர்!
மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!
இந்தியா 536 ஓட்டங்கள் குவிப்பு!
|
|
|


