இலங்கை தோல்விக்கு காரணம் யார்?

Sunday, January 1st, 2017

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் தோல்விக்கான காரணத்தை அணித்தலைவர் மேத்யூஸ் வெளியிட்டுள்ளார். இரண்டு இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் தவறான ஷாட்களை தெரிவு செய்து துடுப்பாடியதே அணியின் தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தென் ஆப்பிரக்கா அணிக்கு எதிராக ஓட்டங்கள் சேர்ப்பது மிக கடினம். திறமையாக செயல்பட்டே ஓட்டங்களை சேர்க்க முடியும்.

ஓட்டங்கள் பெற சில வாய்ப்புகளே உள்ளன. தளர்வான பந்து வரும் வரை வீரர்கள் காத்திருந்து துடுப்பாட வேண்டும். தென் ஆப்ரிக்கா வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இலங்கை வீரர் மென்டிஸ் புத்திசாலித்தனமாக துடுப்பாடினார். பிரச்சனையிலிருந்து அணிக்கு திரும்பியுள்ள பந்து வீச்சாளர் சமீர முழு திறனில் இல்லை என மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

South African players celebrate the dismissal of Sri Lanka batsman Kusal Janith Perera (front) during the fourth day of the first Test between South Africa and Sri Lanka on December 29, 2016 at the Port Elizabeth cricket ground in Port Elizabeth.  / AFP PHOTO / GIANLUIGI GUERCIA

Related posts: