இலங்கை – தென்னாபிரிக்கா டி 20 : களமிறங்கும் அதிரடி வீரர்!
Wednesday, January 25th, 2017
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் தென் ஆபிரிக்கா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏ பீ டி வில்லியர்ஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உபாதை காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் தொடக்கம் தென்னாபிரிக்கா அணிக்காக இவர் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அத்தோடு தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணித் தலைவர் நாடு திருப்பியுள்ள நிலையில் தலைமை பொறுப்பு தினேஷ் சந்திமலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளை வெற்றிகொண்டுள்ள நிலையில், மூன்றாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக காணப்படுகின்றது. இதை அடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையில் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் இடம்பெறவுள்ளது.

Related posts:
இந்திய தொடருக்கு குமார் தர்மசேனவுக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் சாதனை!
கொரோனா தொற்றின் தாக்கம் : ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் பலி!
|
|
|


