இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்லத் தடை!

Monday, August 14th, 2023

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கை செய்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாத காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2020 லங்கா பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் பங்கேற்ற இரண்டு கிரிக்கெட் வீரர்களை தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்டியதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: