இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
Friday, February 16th, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் முகாமையாளரான சைமன் வில்லிஸ் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா அணியினருடன் 3 ஆண்டுகள் தவணைக்காலமாக 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்.
எனினும் அவர் தற்போது தனது சேவையை இரண்டு ஆண்டுகளுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும் இதனால் தனது பதவியில் இருந்துவிலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவிக்கு கிரிக்கெட் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வாவின் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் வில்லிஸ்நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டு பிளிஸ்சிஸ் பெருமிதம்!
செப்டெம்பரில் தென் ஆபிரிக்க அணி இலங்கை வருகை!
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் - எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் ...
|
|
|


