இலங்கை இந்திய தொடர் : துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா!
Wednesday, July 26th, 2017
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. காலி விளையாட்டரங்களில் இடம்பெறுகின்ற குறித்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியான இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றார். இதுவரையில் ஐந்து போட்டிகளுக்கு இலங்கை அணிக்காக தலைமை தாங்கியுள்ள ரங்கன ஹேரத், அவற்றில் 3 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், ஒன்றில் இலங்கை அணி தோல்வியும் சந்தித்துள்ளது.
மேலும் இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற எந்த டெஸ்ட் போட்டிகளும் முடிவுகள் இன்றி முடிந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் புதிய சாதனை !
5 ஆவது சதத்தினை பெற்ற தனஞ்ஜய டி சில்வா !
கொரோனா தொற்று: முன்னாள் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!
|
|
|


