இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு!
Tuesday, August 6th, 2024
இலங்கை ஆடவர் அணி இந்த மாதம் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தது.
இதன்படி இரண்டு அணிகளும் எதிர்வரும் 14 ஆம் திகதிமுதல் 17 ஆம்திகதி வரையில் பயிற்சி போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது.
அதன்பின்னர் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 29 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 2 ஆம் திகத வரையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 6 ஆம் திகதிமுதல் 10 ஆம் திகதிவரையில் நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


