இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வெளியேற்றம்!

Wednesday, August 30th, 2017

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சாமர கப்புகெதரவே வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்தலைவராக செயல்பட்டவர் சாமர கப்புகெதர.

காயம் காரணமாக சாமர கப்புகெதர தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்தினால் இலங்கை அணித்தலைவர் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், கப்புகெதர இடைகால அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவரும் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில் கப்புகெதரவுக்கு பதிலாக 4வது போட்டிக்கான புதிய அணித்தலைவரை இலங்கை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: