இலங்கை அணிக்கு புதிய தலைவராக தினேஷ் சந்திமால் நியமனம்!
Thursday, February 8th, 2018
பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இலங்கை அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்ற முக்கோண தொடரில் இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸின் வலது பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக நாடு திரும்பியுள்ளார்.
இதனால் டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பும் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பும் தினேஸ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற இருபதுக்கு இருபது போட்டியில் தினேஸ் சந்திமால் இறுதியாக இலங்கை அணியின்தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு நாள் அரங்கில் அதிக வெற்றிகள் பெற்ற அணி எது? இலங்கை அணி எத்தனை வெற்றிகள் பெற்றுள்ளது?
700 இலக்குகளை வீழ்த்துவார் லையன் - ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர்!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடல்!
|
|
|


