இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா!
Monday, August 6th, 2018
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பல்லேகலேவில் நடைபெற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி
50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 363 ரன்களை குவித்தது. அந்த அணியில் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 102, பால் டுமினி 92, ஹாசிம் ஆம்லா 59, டேவிட் மில்லர் 51) ரன்களை குவித்தனர். இலங்கை அணி தரப்பில் திஸாரா பெரைரா 4-75, லஹிரு குமாரா 2-67). பின்னர் ஆடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 285 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் தனஞ்செய டி சில்வா 84, குஸால் மென்டிஸ் 31, அகிலா தனஞ்செயா 37, குஸால் பெரைரா 27) ரன்களை எடுத்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் நிகிடி 4-57, அன்டில் 3-74, ஷம்சி 2-62 ) விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. ஹென்ட்ரிக்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Related posts:
|
|
|


