இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடம்!
Thursday, March 23rd, 2017
இலங்கையில் காற்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மென்செஸ்ட்டர் என்ற பெயரிலான பயிற்சிக் கூடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதன் அங்குரார்ப்பண வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடகப் பணிப்பாளர் ரஞ்சித் ரொட்ரிகோ நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து தெரிவிக்கையில்:
இந்த அக்கடமியில் ஆரம்பக்கட்டமாக 200 பிள்ளைகள் இணைய முன்வந்துள்ளார்கள். தேசிய அணிக்காக விளையாடிய சிரேஷ்ட வீரர்கள் காற்பந்தாட்டப் பயிற்சிக் கூடத்தை நிர்வகிப்பார்கள் என்று மேலும் கூறினார்.
Related posts:
T 20 உலக கோப்பை போட்டி அட்டவணை!
9 விக்கட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!
ராஜஸ்தான் தலைமைப் பதவியில் இருந்து ஸ்மித் இராஜினாமா!
|
|
|


