இலங்கையில் நடத்தப்படவிருந்த 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடர இடைநிறுத்தம் – தென்னாபிரிக்காவில் நடத்த ஏற்பாடு!

Wednesday, November 22nd, 2023

இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதெச கிரிகெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை தடை செய்திருக்கும் வேளையிலேயே இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த போட்டியில், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிராந்திய தகுதி மூலம் நமீபியா (ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்று), நேபாளம், நியூசிலாந்து (EAP பிராந்திய தகுதிச்சுற்று), ஸ்காட்லாந்து (ஐரோப்பா பிராந்திய தகுதிச்சுற்று), அமெரிக்கா (அமெரிக்கா பிராந்திய தகுதி) ஆகியவையும் போட்டியிடும்.

தென்னாப்பிரிக்கா 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்றாவது முறையாக போட்டியை நடத்துகின்றது.

2024ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 9 வரை நடைபெறும்.

நடப்பு சாம்பியனான இந்தியா ஜனவரி 14 ஆம் திகதி வங்காளதேசத்திற்கு எதிராக தனது போட்டியை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: