இலங்கையிடம் ஜப்பானிய அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Monday, June 28th, 2021

கடுமையான கோவிட் தடுப்பு முறைகளை பின்பற்றுமாறு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை உட்பட ஆறு தெற்காசிய நாடுகளிடம் ஜப்பானிய அரசாங்கம் கேட்டுள்ளது.

இந்த நாடுகளின் வீரர்கள் ஜப்பானுக்கு புறப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் ஒவ்வொரு நாளும் கோவிட் -19 சோதனைகளை மேற்கொள்ளுமாறு ஜப்பானின் அரச செய்தி நிறுவனமான பெர்னாமா தெரிவித்துள்ளது.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மாலைத்தீவு, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் டெல்டா மாறுபாடு பரவியுள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் 2021, ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளின் பங்கேற்பாளர்கள் ஜப்பானுக்குள் நுழைவதற்கு முன்பே தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும்.

எகிப்து, வியட்நாம், மலேசியா, பிரிட்டன் மற்றும் பங்களாதேஷில் இருந்து பங்கேற்பாளர்கள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஒவ்வொரு நாளும் சோதிக்கப்பட வேண்டும் என்றும் ஜப்பானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

000

Related posts: