இலங்கைக்க எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் – பங்களாதேஷ் அணி அறிவிப்பு!
Wednesday, February 14th, 2024
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் என்பனவற்றுக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நேற்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் – ஹசன் விலகியுள்ளார்.
அவரது இடது கண்ணில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதியும், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் மாதம் 13ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வரலாற்று வெற்றியினை உறுதிசெய்யது பங்களாதேஷ்!
இரட்டை விருதைப் பெற்றார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்!
முதலிடத்தை இழந்தார் விராட் கோஹ்லி!
|
|
|


