இலங்கைக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா!
Wednesday, September 15th, 2021
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, நேற்று கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்த, 121 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 14.4 ஓவர்கள் நிறைவில், விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை தென்னாபிரிக்காக 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
000
Related posts:
பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை: ஜாம்பவான் ஜெயசூர்யா குமுறல்!
அரசியல் குறித்து மலிங்கவின் செய்தி!
இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட்: இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள்!
|
|
|


