இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டொக்ஸ்!
Saturday, September 3rd, 2022
அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியில் பென் ஸ்டொக்சும் இணைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர்கொண்ட இங்கிலாந்து குழாமில் பென் ஸ்டொக்ஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே அணி, உலக கிண்ணத் தொடருக்கு முன்னர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மூன்று 20 இற்கு 20 போட்டிகளிலும் கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இங்கிலாந்து அணியை சேர்ந்த தென்னாபிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஜேசன் ரோய் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன ஹேரத்!
உலக பெட்மிண்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!
அனித்தாவின் சாதனையினை முறியடித்த சச்சினி!
|
|
|


