இந்திய – இங்கிலாந்து தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்று சாதனை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 2090 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. இது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட தொடராக புதிய சாதனை படைத்துள்ளது.
ஆபிரிக்க – ஆசிய கிண்ணத்தில் 1892 ஓட்டங்கள் பெற்றதே முன்னர் சாதனையாக இருந்தது.
அதேபோன்று இந்திய – தெனாபிரிக்க அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1884 ஓட்டங்கள் குவிக்கப்பட்டு இருந்தன.
இந்த 2090 ஓட்டங்கள் குவிப்பதில் 6 முறையும் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு சராசரியாக 7 ஓட்டங்கள் இந்த தொடரில் எடுக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 1,500 ஓட்டங்கள் எடுத்தார். இந்த ஓட்டத்தை எடுத்த 5ஆவது வீரர் ஆவார். ரிச்சர்ட்ஸ், பொண்டிங், ஜயவர்தன, சங்கக்கார ஆகியோர் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 1,500 ஓட்டங்கள் எடுத்து இருந்தனர்.
இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்த ஒருநாள் தொடரை இந்தியா 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Related posts:
|
|