இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

பார்வையற்றோர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான லீக் போட்டி நடைபெற்றது.
குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து, 227 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.4 ஓவர்களில் 227 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Related posts:
இறுதி ஏலப்பட்டியலில் 351 வீரர்கள்!
பாகிஸ்தான் வீரர் இரட்டை சதம் அடித்து சாதனை!
உலகக் கிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி!
|
|