இந்திய அணிக்கு நண்பர்களாக இருந்து ஆதரவு கொடுங்கள் – சேவாக்!

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு நண்பர்களாக இருந்து ஆதரவு கொடுங்கள் என்று இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”நல்ல நண்பர்கள் கடினமான நேரத்தைக்கூட எளிதாக மாற்றுவார்கள். இந்த தோல்வி ஏமாற்றம்தான். ஆனால், நீங்கள் நல்ல நண்பர்கள்தானே? இந்த நேரத்தில் நல்ல நண்பர்களே அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புனேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதனால் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், சேவாக் இந்திய அணிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
மூன்றாவது டெஸ்ட் சமநிலை: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
தரப்படுத்தலில் முதலிடம் கொக்குவில் சி.சி.சி!
இலங்கை - மேற்கிந்திய கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவு!
|
|