இந்தியா வெற்றி!
Monday, May 29th, 2017
இங்கிலாந்தில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள செம்பியன் லீக் தொடரில் பங்குகொள்ளும் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி ஒன்று நேற்று இடம்பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையின் படி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 38.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது பதிலளித்த இந்திய அணி, 26 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இந்தநிலையில் டக்வத் லூயிஸ் முறையின் படி இந்திய அணி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Related posts:
ஜப்பானில் ரோபோக்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டி
2017 ரகர்' தொடர் போட்டியில் இலங்கை அணிக்கு ஐந்தாவது தர கௌரவம்!
இலங்கை அணிகடகு ஆறுதல் வெற்றி!
|
|
|


