இந்தியா சிமெண்ட்ஸின் வேலைக்காரன் டோனி – லலித் மோடி !

Wednesday, May 10th, 2017

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, முன்னாள் இந்திய அணித்தலைவர் டோனியின் சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளார்.முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, முதல் ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட கோடிகளை மோசடி செய்து இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், சீனிவாசனின் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸில் இருந்து டோனிக்கு கடந்த 2012ல் வழங்கிய Offer Letter – ஐ லலித் மோடி வெளியிட்டுள்ளார்.

அதில், டோனி மாதமாதம் சம்பளம் வாங்கும் ஊழியர் என குறிப்பிடப்பட்டு, மாதம் அவரின் மொத்த சம்பளமாக ரூ.60,000 குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர, டோனியின் பொழுதுபோக்கு ஊதியமாக ரூ. 4,500, பேப்பர் செலவுக்காக ரூ.175ம் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, கரண்டு பில், தண்ணீர், சமையல் கேஸ் உள்ளிட்டவைகளுக்கான செலவுகளை டோனி தனது சம்பளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012ல் டோனிக்கு சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கூலிக்காரன் என Offer Letter கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: