இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் இலங்கைக்கு மத்தியூஸ் ஆறுதல் கொடுப்பாராம் – சனத் ஜெயசூர்யா!

இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் நட்சத்திர வீரர் மதிதியூஸ் பந்து வீசுவார் என இலங்கை தேர்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து இலங்கை நட்சத்திர வீரர் மேத்யூஸ், இலங்கை அணத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு மேத்யூஸ் பந்து வீசாததும் ஒரு காரணம் என புதிய அணித்தலைவர் சந்திமால் கூறியிருந்தார். எனினும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக சுகம் பெறாத மேத்யூஸ் பந்து வீசுவதற்கு இன்னும் தயாராகவில்லை. அவர் பந்துவீசக்கூடாது என்று இலங்கை அணி உடற்பயிற்சியாளர் ஆலோசனை வழங்கியிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்து வொயிட் வாஷ் ஆன இலங்கை அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றி பதிலடி தர சம பலத்துடன் களமிறங்கவுள்ளது. சனத் ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை நட்சத்திர வீரர் மேத்யூஸ் பந்து வீசுவார் என தெரிவித்துள்ளார்.இது இலங்கை அணிக்கு ஒரு பெரிய ஆறுதல், நமது பக்கததை சமப்படுத்த உதவுகிறது என சனத் ஜயசூரிய அறிவித்துள்ளார்
Related posts:
|
|