இந்தியன் ப்ரீமியர் லீக் – ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணியை வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி!

Thursday, May 16th, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ரோய்ல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 66 ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன

ஐதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது

இதேவேளை குஜராத் அணி 13 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகளை பெற்றுள்ளது

மேலும் இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இதில் குஜராத் 3 போட்டிகளிலும் ஐதராபாத் ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றமை குறிப்பிடடத்தக்கது.

000

Related posts: