இங்கிலாந்து முன்னிலை!
Sunday, June 12th, 2016
இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், நாணயசுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
கிறிஸ் வோக்ஸ் 66 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 167 ஓட்டங்கள் விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
மூன்றாம் நாளான நேற்று இலங்கை அணி 288 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. கருணரத்னே 50, கவுசல் 79, குசால் 42, ஹெராத் 31, மெண்டிஸ் 25, சண்டிமால் 19, திரிமன்னே 17 ஓட்டங்கள் எடுத்தனர்.
பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு நிக் காம்ப்டன்(19), பிரதீப் பந்தில் ஜோ ரூட்(4), ஜேம்ஸ் வின்ஸ்(0), பேர்ஸ்டோவ்(32) போல்டாகினர்.
இரண்டாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 109 ஓட்டங்கள் எடுத்து 237 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ்(41), ஸ்டீவன் பின்(6) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் பிரதீப்3 விக்கெட் கைப்பற்றினார்.


Related posts:
|
|
|


