இங்கிலாந்து பிரீமியர் லீக் : லெய்செஸ்டரை வென்றது செல்சி!

Monday, October 17th, 2016

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின், நேற்றுச் சனிக்கிழமை (15) இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, ஆர்சனல், வெஸ்ட் ஹாம், போர்ண் மெத், ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், மன்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் டொட்டென் ஹொட்ஸ்பர், வெஸ்ட் ப்ரோம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

செல்சிக்கும் தற்போதைய சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. செல்சி சார்பாக, ஈடின் ஹஸார்ட், டியகோ கொஸ்டா, விக்டர் மோஸஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ஆர்சனல், சுவான்சீ ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-2  என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. ஆர்சனல் சார்பாக, தியோ வொல்கொட் இரண்டு, மேசூட் ஏஸில் ஒரு கோலினைப் பெற்றனர்.

மன்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக பெறப்பட்ட கோலை நொலிட்டோ பெற்றிருந்தார். கெவின் டி ப்ரூனே, சேர்ஜியோ அக்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு பெனால்டியைத் தவறவிட்டிருந்தனர்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக டெலே அல்லி கோலைப் பெற்றிருந்தார்.

ஏனைய போட்டிகளில், 1-0 என்ற கோல் கணக்கில், கிறிஸ்டல் பலஸ்ஸை வெஸ்ட் ஹாம் தோற்கடித்ததுடன், 6-1 என்ற கோல் கணக்கில் ஹள் சிற்றியை போர்ண்மெத் தோற்கடித்ததுடன், சந்தர்லேண்ட்டை, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றி தோற்கடித்திருந்தது.

இப்போட்டிகளின் முடிவில், மன்செஸ்டர் சிற்றியும் ஆர்சனலும் 19 புள்ளிகளைப் பெற்றுள்ள போதும், கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் சிற்றி முதலிடம் வகிக்கின்றது. 18 புள்ளிகளுடன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் மூன்றாமிடம் வகிக்கிறது.

sports-chelsea_1

Related posts: