இங்கிலாந்துக்கு 405 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Sunday, November 20th, 2016
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு 405 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 455 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 255 ஓட்டங்களும் குவித்தது.பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அணித்தலைவர் கோஹ்லி 56 ஓட்டங்களுடனும், ரஹானே 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related posts:
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து பாகிஸ்தான்!
ரபாடா எந்திரம் அல்ல- அணித்தலைவர் டூபிளிசிஸ் ஆதங்கம்!
சங்கக்காரவை கௌரவப்படுத்திய ஐசிசி!
|
|
|


