ஆஸ்திரேலியாவிடம் தோல்வி – பதவி இழக்கிறார் அசார் அலி?
Saturday, January 28th, 2017
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்ததையடுத்து அசார் அலியிடம் இருந்து அணித்தலைவர் பதவியை பறிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி அணி கேப்டன் அசார் அலி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார். அவரிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு நாள் போட்டி அணிக்கு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது புதிய கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

Related posts:
ஆஸி வீரர்களின் ஊதிய முரண்பாடு தொடர்கிறது!
ஜாம்பவான்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் தொடர்!
இலங்கை கிரிக்கட்டின் தலைவரானார் சம்மி சில்வா!
|
|
|


